கடந்த சில மாதங்களாக இந்த நிழற்குடை அருகே செடிகொடிகள் அடர்த்தியாக வளர்ந்து, விஷ ஜந்துக்களின் நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் அப்பேருந்து நிழற்குடையை பயன்படுத்த அச்சம் தெரிவித்தனர். மேலும், பேருந்து நிழற்குடையை ஆக்கிரமித்து வளர்ந்துள்ள செடிகொடிகளை அகற்றி தூய்மைப்படுத்த நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதுதொடர்பான செய்தி தினகரன் நாளிதழில் நேற்று முன்தினம் படத்துடன் வெளியாபது. அதன் எதிரொலியாக, நெடுஞ்சாலைத்துறை திருத்தணி கோட்ட உதவி பொறியாளர் ரகுராமன் உத்தரவின் பேரில் சாலைப் பணியாளர்கள் பேருந்து நிழற்குடையை ஆக்கிரமித்து வளர்ந்திருந்த செடிகொடிகளை நேற்று அகற்றினர். இதனால் எவ்வித அச்சமுமின்றி பயணிகள் பேருந்து நிழற்குடையில் அமர்ந்து பயணம் செய்கின்றனர்.
The post பீரகுப்பம் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே பயணியர் நிழற்குடை சீரமைப்பு appeared first on Dinakaran.