இதனால் பெண்ணின் உறவினர்கள், திருத்தணி காவல் நிலையத்தில், எஸ்சி, எஸ்டி பிரிவின் கீழ் புகார் கொடுத்துள்ளனர். இதன் அடிப்படையில், மணமகன் தரன் மற்றும் குடும்பத்தினர் 5 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில், திருவள்ளூர் பகுதியில் சுற்றித்திரிந்த தரனை நேற்றிரவு அனுசியா கண்டுபிடித்தார். உடனடியாக அவரை உறவினர்கள் முன்னிலையில், திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே உள்ள அம்மன் கோயிலுக்கு அழைத்துவந்துள்ளார். பின்னர் அங்கு வைத்து இரண்டு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் மணமகன் தரப்பு வழக்கறிஞர்கள் ஆகியோர் முன்னிலையில் தாலி கட்டிக்கொண்டார். இதன்பிறகு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆஜரானார். இருவரையும் திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவீட்டார் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன்பிறகு போலீசார் அறிவுரை கூறி மணமக்களும் அவர்களது குடும்பத்தினரும் அனுப்பி வைத்தனர்.
The post கடந்த மாதம் வரவேற்பு முடிந்தவுடன் எஸ்கேப் ஆன மணமகனை கண்டுபிடித்து கோயிலில் வைத்து தாலிகட்டிய ஐடி பெண்: திருவள்ளூரில் அரங்கேறிய பரபரப்பு appeared first on Dinakaran.