திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற மாநாட்டை வெற்றி பெற செய்த அனைவருக்கும் நன்றி: விசிக துணை பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி எம்எல்ஏ அறிக்கை

சென்னை: திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற மாநாட்ைட வெற்றி பெற செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்வதாக விசிக துணைப் பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி எம்எல்ஏ அறிக்கை வெளியிட்டுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி எம்.எல்.ஏ.இன்று வெளியிட்ட அறிக்கை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் அழைப்பை ஏற்று உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற மது-போதை பொருள் ஒழிப்பு மகளிர் மாநாட்டிற்கு அலை கடலென திரண்டு அதனை வெற்றியாக்கிய இலட்சோப இலட்ச தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும் அனைத்து தரப்பு மக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியினை விடுதலைச் சிறுத்தைகளின் கட்சி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். இம்மாநாட்டிற்கு தங்களது கட்சியின் பிரதிநிதிகளை அனுப்பி வைத்த திமுக தலைவர், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், தோழமை கட்சியின் தலைவர்களுக்கும் பங்கேற்ற பிரதிநிதிகளுக்கும் நன்றியினை உரித்தாக்குகிறோம்.

மாநாட்டில் பங்கேற்று உரையாற்றி ஊக்கப்படுத்திய பாலபிரஜாபதி அடிகளாருக்கும், தோழமை கட்சிகளின் ஆளுமைகளுக்கும் நன்றி. மாநாட்டிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுத்த தமிழ்நாடு அரசு காவல்துறைக்கும் எங்களது உணர்வுபூர்வமான நன்றியினை தெரிவிக்க கடமைபட்டுள்ளோம். மக்கள் நலம் காக்க மது-போதை பொருள் ஒழிப்பு என்கிற மகத்தான முன்னெடுப்பை ஊக்கப்படுத்திடும் அச்சு, காட்சி, இணைய ஊடகங்கள் மற்றும் ஊடகவியல், ஒளிப்பதிவாளர்களுக்கும் நன்றி. மது-போதை பொருள் ஒழித்து மனிதவளம் காக்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மேற்கொள்ளவிருக்கும் செயல்திட்டங்களுக்கு தொடர்ந்து அணைவரும் ஒத்துழைப்பை வழங்கிட வேண்டுகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

The post திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற மாநாட்டை வெற்றி பெற செய்த அனைவருக்கும் நன்றி: விசிக துணை பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி எம்எல்ஏ அறிக்கை appeared first on Dinakaran.

Related Stories: