கோவை ஈஷா மையத்தில் யோகா கற்றுக்கொள்ள சென்ற தனது மகள் லதா, கீதா ஆகியோரை மூளைச்சலவை செய்து சந்நியாசி ஆக்கியதாகவும், அவைகளை மீட்டுத்தர கோரியும் கோவை வேளாண் பல்கலைக்கழக தலைவர் முன்னாள் பேராசிரியர் கோவை காமராஜ், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு விசாரித்தது. இந்த விவகாரத்தில் காவல்துறை மற்றும் ஈஷா தரப்பு வாதங்களை பதிவு செய்து பல்வேறு சந்தேகங்கள் உள்ளதாக குறிப்பிட்ட நீதிபதிகள், உண்மையை கண்டறிய வேண்டும் என ஈஷா யோகா மையத்திற்கு எதிரான எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறித்து அக்.04ம் தேதிக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
இதையடுத்து தமிழக காவல்துறையினர் 150க்கும் மேற்பட்டோர் ஈஷா யோகா மையத்திற்கு சென்று விசாரணையை தொடங்கிய நிலையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை கோரி ஈஷா யோகா மையம் சார்பில் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை இன்றே விசாரிக்க கோரி மூத்த வழக்கறிஞர் வாதிட்டார்.
பின்னர் இந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் விசாரணை செய்தது. ஆசிரமத்தில் தங்கியுள்ள சந்நியாசியான லதாவிடம், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி காணொளி வாயிலாக பேசினார். அப்போது தங்களது சொந்த விருப்பத்தின் பேரிலேயே ஆசிரமத்தில் தங்கியுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இந்த வாதத்தை பதிவு செய்துகொண்ட உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து ஆட்கொணர்வு மனுவை உச்சநீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளதால், காவல்துறைக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் நிலவர அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உயர்நீதிமன்ற உத்தரவிற்கு தடை விதித்து வழக்கு விசாரணையை அக்18ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.
The post கோவை ஈஷா மையத்தில் காவல் துறை விசாரிக்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை appeared first on Dinakaran.