நெல்லை கங்கைகொண்டானில் சோலார் செல் உற்பத்தி தொழிற்சாலை அமைக்கிறது விக்ரம் சோலார்

சென்னை: நெல்லை கங்கைகொண்டானில் ரூ.1,260 கோடியில் சிப்காட் சோலார் செல் உற்பத்தி தொழிற்சாலை அமைகிறது. 146 ஏக்கரில் அமையவுள்ள சோலார் செல் தொழிற்சாலை மூலம் 3,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

இந்த ஆலையில் 3 ஜிகா வாட் சோலார் செல் மற்றும் பிவி சோலார் மாடியூர் உற்பத்தி செய்ய திட்டம். சோலார் செல் உற்பத்தி ஆளை அமைக்க சுற்றுசூழல் அனுமதி கோரி சோலார் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. கங்கைகொண்டான் சிப்காட்டில் 313 ஏக்கரில் டாடா நிறுவனத்தின் டிபி சோலார் நிறுவனம் ஏற்கெனவே ஒரு ஆலையை அமைத்துள்ளது.

இந்தியாவில் சோலார் மின்சாரம் உற்பத்தி மிகப்பெரிய அளவில் ஆதரிக்கும் நிலையில், சோலார் பேனல் உற்பத்தியை அதிகரிக்க ரிலையன்ஸ் உட்படப் பல நிறுவனங்கள் திட்டமிட்டு அதற்காகப் பல ஆயிரம் கோடி ரூபாய் தொகையை முதலீடு செய்து வருகிறது.

இந்தச் சூழ்நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமம் ஆக விளங்கும் விக்ரம் சோலார் நிறுவனம் தமிழ்நாட்டில் புதிய திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. விக்ரம் சோலார் பிரிவு தமிழ்நாட்டில் 4 ஜிகாவாட் சோலார் போட்டோவோல்டாயிக் செல் உற்பத்தி தொழிற்சாலையைத் திருநெல்வேலி மாவட்டத்தில் சுமார் 1260 கோடி ரூபாய் முதலீட்டில் உருவாக்க உள்ளது. இத்திட்டம் மூலம் தமிழ்நாடு அரசின் அடுத்த 10 வருடத்தில் சோலார் மின்சார உற்பத்தியை அதிகரிக்கும் திட்டத்தை எளிதாக அடைய முடியும்.

இந்தச் சோலார் செல் தொழிற்சாலை குறித்து விக்ரம் சோலார் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு அரசுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்து விக்ரம் சோலார் நிறுவனம் இப்புதிய தொழிற்சாலை கங்கைகொண்டான் பகுதியில் அமைக்கப்பட உள்ளது.

தமிழ்நாட்டில் தொழிற்துறை முதல் மக்கள் பயன்பாடு வரையில் மின்சாரத் தேவை தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில் மாற்று மின்சார உற்பத்தி மிகவும் அவசியமான ஒன்றாக மாறியுள்ளது. இதற்காகச் சோலார் மின்சாரத்தை ஊக்குவிக்கத் தமிழ்நாடு திட்டமிட்டு இருந்த நிலையில், இத்திட்டத்தை அடைய விக்ரம் சோலார் நிறுவனம் பெரிய அளவில் உதவும். இந்த சோலார் செல் உற்பத்தி தொழிற்சாலை அமைவதன் முலம் 3,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

The post நெல்லை கங்கைகொண்டானில் சோலார் செல் உற்பத்தி தொழிற்சாலை அமைக்கிறது விக்ரம் சோலார் appeared first on Dinakaran.

Related Stories: