காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்த தடை: பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

சென்னை: காலாண்டு விடுமுறை காலத்தில் மாணவர்களுக்கு எந்த சிறப்பு வகுப்புகளும் நடத்தக் கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் தற்போது காலாண்டு தேர்வுகள் நடந்து நாளையுடன் முடிய உள்ளன. அதன் தொடர்ச்சியாக, அக்டோபர் 2ம் தேதி வரை காலாண்டு தேர்வு விடுமுறை நாள் என்று பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவித்து இருந்தது. இருப்பினும், விடுமுறை நாட்களை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை வைத்தன. அதையேற்று அக்டோபர் 6ம் தேதி வரை விடுமுறை நாட்களை நீட்டித்து பள்ளிக் கல்வித்துறை நேற்று முன்தினம் அறிவித்தது. மேலும், அந்த விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்றும் பள்ளிக் கல்வித்துறை நேற்று தெரிவித்துள்ளது.

அதன் விவரம் வருமாறு: 2024-25ம் கல்வி ஆண்டில் அனைத்துப் பள்ளிகளுக்கும் செப்டம்பர் 28ம் தேதி முதல் அக்டோபர் 6ம் தேதி வரை காலாண்டு தேர்வு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் பள்ளி மாணவர்களுக்கு எந்தவித சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது. அக்டோபர் 7ம் தேதி பள்ளிகள் திறப்பதற்கு முன்னர் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பள்ளி வளாகத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள நடவடிக்ைக எடுக்க வேண்டும். பள்ளிகள் திறக்கும் நாளில் மாணவர்களுக்கு திருத்திய விடைத்தாளை வழங்கவும் தலைமை ஆசிரியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ெதரிவிக்கப்பட்டுள்ளது.

The post காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்த தடை: பள்ளிக்கல்வித் துறை உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: