தேன்கனிக்கோட்டை, செப்.26: அஞ்செட்டி தாலுகா, உரிகம் வனச்சரக அலுவலகம் முன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தளி எம்எல்ஏ ராமச்சந்திரன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், வனவிலங்கு சரணாலயம் என்ற பெயரில் ஆடு, மாடு மேய்ச்சலுக்கு தடை விதிப்பது, விவசாயிகளிடம் லட்சக்கணக்கில் அபராத தொகையாக விதிப்பதை கண்டித்தும், யானை, காட்டு பன்றிகளால் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
The post இ.கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.