உண்டியல் மூலம் ₹5.82 லட்சம் வசூல்

சேலம், செப்.26: சேலம் டவுன் சுகவனேஸ்வரர், ராஜகணபதி ேகாயில் உண்டியல்கள் மூலம் ₹5.82 லட்சம் வசூலானது. மேலும், 22 கிராம் தங்கமும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. சேலம் டவுன் சுகவனேஸ்வரர் கோயில் வைக்கப்பட்டுள்ள நிரந்தர உண்டியல் எண்ணும் பணி நேற்று நடந்தது. இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் (நகை சரிபார்ப்பு) விமலா தலைமை வகித்தார். உதவி ஆணையர் ராஜா, அறங்காவலர் குழு தலைவர் வள்ளியப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் 20க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஈடுபட்டனர். இதில், பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ₹4.79 லட்சம் வசூலானது. அத்துடன், தங்கம் 22 கிராமும், வெள்ளி 460 கிராமும் கிடைத்தது. இதேபோல், சுகவனேஸ்வரர் கோயிலின் உபகோயிலான ராஜகணபதி கோயில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தற்காலிக உண்டியல் வைக்கப்பட்டிருந்தது. நேற்று அவற்றை எண்ணும் பணியும் நடந்தது. அதன்படி ராஜகணபதி கோயிலில் வைக்கப்பட்டிருந்த தற்காலிக உண்டியலில் ₹1.03 லட்சம் காணிக்கையாக பெறப்பட்டது. இப்பணியின் போது அறங்காவலர் ஜெயந்தி, ஆய்வாளர் உமா மற்றும் கண்காணிப்பாளர் மணிமாறன் ஆகியோர் உடனிருந்தனர்.

The post உண்டியல் மூலம் ₹5.82 லட்சம் வசூல் appeared first on Dinakaran.

Related Stories: