சங்ககிரி, செப்.24: சங்ககிரியில், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலகம் மற்றும் சங்ககிரி அரசு மருத்துவ மனை இணைந்து எச்ஐவி, எய்ட்ஸ் குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்தியது. பேரணியை சங்ககிரி அரசு தலைமை மருத்துவ அலுவலர் சரவணகுமார் தலைமை வகித்து கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்பேரணி வி.என்.பாளையம் மாரியம்மன் கோவிலிலிருந்து பவானி சாலை, பழைய பஸ் நிலையம் வழியாக சென்று தாலுகா அலுவலகம் முன்பு நிறைவடைந்தது. இதில் கொங்கணாபுரம் நம்பிக்கை கரம் தன்னார்வலர் செல்வம் மற்றும் தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் உட்பட 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்த பதாகைகளை கையில் ஏந்தியவாறு, கோஷம் எழுப்பியபடி ஊர்வலமாக சென்றனர். இதனையொட்டி, சங்ககிரி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
The post எச்ஐவி தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.