உரம் இருப்பு குறைந்தால் கடையின் லைசென்ஸ் ரத்து ஆய்வு செய்த அதிகாரிகள் எச்சரிக்கை

வேலூர், செப்.26: வேலூர் மாவட்டத்தில் உரக்கடைகளில் இருப்பு குறைந்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர். தமிழகத்தில் உள்ள விவசாயிகளுக்கு தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கிடங்குகள் மூலம் மானிய விலையில் உரம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் வேளாண் இயக்குனர் உத்தரவின்பேரில் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் யூரியா, பொட்டாஷ், காம்பளக்ஸ் ஆகியவற்றை குறைந்தபட்சம் 2 டன் இருப்பில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பு குறைவாக உள்ள உரக்கிடங்கில் ஆய்வு செய்து அங்கு உரங்கள் குறைவாக இருக்கும் பட்சத்தில் அவற்றின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் வேளாண் இயக்குனரகம் எச்சரித்துள்ளது.

அதன்படி, வேலூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் வெங்கடேசன் மேற்பார்வையில் உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) முருகன், வேளாண் அலுவலர் நந்தினி ஆகியோர் வேலூர் மாவட்டத்தில் உள்ள உரக்கடைகளில் நேற்று முன்தினமும், நேற்றும் ஆய்வு நடத்தினர். அப்போது 2 டன் மெட்ரிக் டன் அளவுக்கு குறைவாக இருப்பு வைத்துள்ள கடைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் அடுத்த 10 நாட்களில் உரம் தொடர்ந்து குறைந்திருந்தால் உரிமம் ரத்து செய்யப்படும். தொடக்க வேளாண் கடன் சங்கங்களுக்கு உர வினியோகம் செய்யும் டான்பெட் நிறுவனம், அனைத்து தொடக்க வேளாண் கடன் சங்கங்ளுக்கு குறைந்தபட்சம் 2 டன் உரங்கள் இருப்பு வைக்க வேண்டும் என அறிவுரை வழங்கினர்.

The post உரம் இருப்பு குறைந்தால் கடையின் லைசென்ஸ் ரத்து ஆய்வு செய்த அதிகாரிகள் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: