விவசாயிகளுக்கு பயிற்சி

உத்திரமேரூர்: முதல்வர் மு.க.ஸ்டாலின், விவசாயிகளை ஊக்குவித்து வேளாண் தொழிலில் புரட்சி ஏற்படுத்தும் நோக்கில் தமிழக வேளாண் துறையின் மூலம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில், உத்திரமேரூர் வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை அட்மா மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் அங்கக வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு மாநிலங்களுக்கு இடையேயான கண்டுணர்வு பயணத்தில் ஆந்திரா ராஷ்ட்ரீய சேவா சமிதி கிருஷி விக்யான் கேந்திரா நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். உத்திரமேரூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் முத்துலட்சுமி தலைமை வகித்து பயணத்தை துவக்கி வைத்தார். இதில், ராஷ்ட்ரீய சேவா சமிதி ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர், அங்கக வேளாண்மை என்ற தலைப்பில் 20 விவசாயிகளுக்கு அங்கக வேளாண்மையின் முக்கியத்துவம் மற்றும் சாகுபடி பற்றி விளக்கினார். பண்ணை மேலாளர் சுதாகர், பண்ணை அங்கக வேளாண்மை வயல்களையும், உதவி பேராசிரியர் பிரியங்கா, அங்கக வேளாண்மை வயல்களையும் விவசாயிகளுக்கு சுட்டி காட்டினர். ஏற்பாடுகளை தொழில்நுட்ப மேலாளர் லதா, உதவி தொழில்நுட்ப மேலாளர் குமரவேல் செய்திருந்தனர்.

The post விவசாயிகளுக்கு பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: