விஷமாகும் உணவுகள்… உஷார் ப்ளீஸ்!

நன்றி குங்குமம் டாக்டர்

உணவு நிறங்கள் உள்ளத்திற்கு உற்சாகமூட்டுகின்றன, உடலுக்கு ஊட்டமாகவும் செயல்பட்டு நன்மையளிக்கின்றன என்றாலும் அவை ஒரு அளவுகோலுக்குள்தான் இருக்க வேண்டும். நவீனகால உணவுகள் பெரும்பாலும் பதப்படுத்துதலுக்கு உள்ளாகும் உணவுகள் என்பதாலும் நுகர்வோரைக் கவர்ந்திழுக்க வேண்டும் என்பதாலும் உணவு நிறங்கள் மிகத் தாராளமாக சேர்க்கப்படுகின்றன. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பினரும் ஆர்வமாக வாங்கி உண்ணும் ரெடிமேட் உணவுகள் அனைத்திலும் செயற்கை நிறங்களே சேர்க்கப்படுகின்றன.

செயற்கை உணவு நிறங்கள் குறிப்பிட்ட அளவுகளைக் கடந்து உடலுக்குள் செல்லும்போது, பல்வேறு உபாதைகளை ஏற்படுத்தி உடலுக்குத் தீங்கிழைக்கின்றன என்பது பல்வேறு ஆராய்ச்சிகளின் வழியாக உறுதிப்படுத்தப்பட்டுவருகிறது.

இவற்றையெல்லாம் தவிர்க்க நாம் தினந்தோறும் உண்ணும் உணவு ஆரோக்கியமாக இருக்கின்றதா என பார்க்கின்றோம் ஆனால் அதை எப்படி சாப்பிடவேண்டும் எவ்வளவு சாப்பிடவேண்டும் என்ற அளவை மறந்துவிடுகின்றோம். நாம் உண்ணும் உணவு ஆரோக்கியமாக இருப்பது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு அளவோடு சாப்படுவதும் முக்கியம். இதனால்தான் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். அந்த வகையில் சிலவற்றைப் பார்ப்போம்:

*அளவுக்கு அதிகமாக சிவப்பு மிளகாயைப் பயன்படுத்தினால் இரைப்பைப் புண் அதிகரிக்கும்.

*அதிகமாக காபி குடிப்பவர்களுக்கு இதய நோய், நடுக்கம் மற்றும் பயம் ஏற்படலாம். மேலும், ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகளுக்கும் வழிவகுக்கும். சில நேரங்களில் அது மிக தீவிரமாகச் சென்று இதயத்துடிப்பை நிறுத்திவிடவும் கூடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

*அதிகமாக உண்ணப்படும் கத்தரிக்காய் தோல்நோய் மற்றும் அலர்ஜியை ஏற்படுத்தும்.

*பூண்டை அதிக அளவில் சமையலில் சேர்த்தால் சிலருக்கு ஒவ்வாமையைத் தூண்டிவிடலாம்.

*இஞ்சியை அதிக அளவில் உண்டு வந்தால் உணவுக்குழாய் புண் உருவாகும் வாய்ப்பு உண்டு.

*அதிகமாக சேர்க்கப்படும் தேன் குடலில் உயிர் கொல்லும் நச்சுப்பொருளை உருவாக்கும்.

*அதிகமாகப் பால் அருந்தினால் கொலஸ்ட்ரால் அதிகரித்து இதயநோய் உண்டாகலாம்.

*அதிகமாக பட்டாணியை உணவில் சேர்த்துக் கொண்டால் கருத்தடை ஏற்படலாம்.

*உருளைக்கிழங்கு அதிகம் உண்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென அதிகரிக்கும். எனவே அளவாக உண்ண வேண்டும்.

*அளவுக்கு அதிகமாக கேரட் சேர்த்துக் கொண்டால் தோல் மஞ்சள் நிறமாக மாறக்கூடும்.

*அதிகப்படியான தண்ணீர் குடிக்கும் பழக்கமும் ஆபத்துதான். தண்ணீர் குடித்தால் உடலுக்கு மிகவும் நல்லது என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் தண்ணீர் குடிப்பதிலும் அளவுகள் இருக்கின்றது. குறைவான அளவில் தண்ணீர் குடித்தாலும், அதிகமான அளவில் தண்ணீர் குடித்தாலும் பிரச்னைதான். எனவே, ஒருவர் ஒரு நாளைக்கு சுமார் 2 முதல் 4 லிட்டர் வரை தண்ணீர் குடிக்கலாம், ஆனால் தண்ணீர் அளவு 6 லிட்டர் மேல் தாண்டினால் அது உடலுக்கு விஷமாக மாறிவிடும்.

*ஃபிரிட்ஜ் வந்ததன் பின்னர், சட்னி அரைத்து அதை ஒரு வாரத்திற்கு பயன்படுத்துவது, குழம்பு வைத்து அதை மூன்று நாட்களுக்குப் பயன்படுத்துவது என்று வாழ்ந்து வருகிறோம். வீட்டிற்குள்ளேயே காஸ்ட்லி குப்பைத் தொட்டியாக பலரின் வீடுகளில் ஃபிரிட்ஜ் இருக்கிறது. உணவை மீண்டும் சூடாக்குவது பல இல்லத்தரசிகளிடையே இருந்து வருகிற நடைமுறை. இது வசதியாகவும், சமையலறையில் நேரத்தையும் மிச்சப்படுத்துகிறது. உணவுகளை வீணாக்குவதைத் தவிர்க்கிறது.

ஆனால், சில உணவு வகைகள் மீண்டும் சூடுபடுத்துவதற்கு ஏற்றதல்ல. அவரை பாதுகாப்பற்றதாகவும்… ஏன் சமயங்களில் உயிருக்கே உலை வைக்கும் அளவுக்கு விஷமாகவும் மாறக் கூடியது. அதனால், சாப்பாட்டை வீணாக்கவில்லை என கருதி உயிருக்கே உலை வைக்காதீர்கள்.

*எந்தெந்த உணவுகளை மீண்டும் சூடாக்குவதைத் தவிர்க்க வேண்டும் என்பதையும், சூடுபடுத்தினாலும் அவற்றின் சுவை மற்றும் ஊட்டச்சத்து மதிப்பைப் பாதுகாக்கும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம் வாங்க. அதே வேளையில், சில உணவுகள் மீண்டும் சூடுபடுத்தப்படும் போது, செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். உங்கள் உணவின் சுவை மற்றும் பாதுகாப்பு இரண்டையும் பராமரிப்பதற்கு இந்த உணவு வகைகளைப் புரிந்துகொள்வது முக்கியம்.

மீண்டும் சூடுபடுத்துவதைத் தவிர்க்க வேண்டிய 7 உணவுகள்

1. இலைகள், கீரைகள்

கீரை மற்றும் வெந்தயம் போன்ற உணவுகளில் நைட்ரேட்டுகள் உள்ளன. அவைகளை மீண்டும் சூடுபடுத்தப்படும் போது தீங்கு விளைவிக்கும் கலவைகளாக
மாறி விடுகிறது. இந்த கலவைகள் பெரியளவில் உட்கொள்ளும் போது, நோய்களின் ஆபத்தை அதிகரிக்கலாம். இலை கீரைகளை மீண்டும் சூடுபடுத்துவதை விட புதிய அல்லது சாலட்களில் சாப்பிடுவது சிறந்தது.

2. காளான்கள்

காளான்கள் அவற்றின் உயர் புரத உள்ளடக்கத்திற்கு கொண்டாடப்படுகிற உணவு வகையாக இருக்கிறது. ஆனால் அவை மீண்டும் சூடுபடுத்தப்படும்போது, விரைவாக சிதைக்கும் கலவைகளையும் கொண்டிருக்கின்றன. காளான்களை மீண்டும் சூடாக்குவது அதன் அமைப்பு மற்றும் சுவையை இழக்க வழிவகுக்கும், மேலும் அவை சுவையற்றதாக இருக்கும். அதே போன்று சமைத்த உடனேயே காளான்களை உட்கொள்வது நல்லது. தாமதமாக காளான்களை உட்கொள்வதிலும் முழு சத்துக்கள் கிடைப்பதில்லை.

3. முட்டை

முட்டைகளை மீண்டும் சூடாக்குவது பாக்டீரியா மாசுபாட்டின் அபாயத்தை ஏற்படுத்தும். குறிப்பாக அவை நீண்ட காலத்திற்கு அறை வெப்பநிலையில் இருந்தால் இன்னும் சிரமம். முட்டையில் புரதங்கள் உள்ளன. முட்டை உணவு வகைகளை மீண்டும் சூடுபடுத்தும் போது, அதிலிருக்கிற புரதங்கள் உடைந்து விரும்பத்தகாத அமைப்பை உருவாக்குகின்றன. புதிதாக சமைத்த முட்டைகளை உட்கொள்வது பாதுகாப்பானது. முட்டை சேர்த்த உணவு வகைகளை மீண்டும் சூடாக்குவதைத் தவிர்க்கவும்.

4. உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கைச் சமைத்து, மீண்டும் சூடுபடுத்துவதற்கு முன் குளிர்விக்க விடும் போது, அவை ரெட்ரோகிரேடேஷன் எனப்படும் செயல்முறைக்கு உட்படுகின்றன, அங்கு ஸ்டார்ச் மூலக்கூறுகள் மறுசீரமைக்கப்பட்டு செரிமானத்தை எதிர்க்கும். உருளைக்கிழங்கை மீண்டும் சூடாக்குவது அவற்றின் கிளைசெமிக் குறியீட்டில் குறிப்பிடத்தக்க அதிகரிப்புக்கு வழிவகுக்கும், இது அவர்களின் இரத்த சர்க்கரை அளவைக் கவனிப்பவர்களுக்கு ஏற்றதாக இருக்காது.

5. அரிசி

உருளைக்கிழங்கைப் போலவே, அரிசியும் குளிர்ந்து மீண்டும் சூடுபடுத்தும் போது பின்னடைவுக்கு உட்படுகிறது. இது எதிர்க்கும் மாவுச்சத்தை அதிகரிக்க வழிவகுக்கும், இது சில நபர்களுக்கு செரிமான அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். மேலும், மீண்டும் சூடுபடுத்தப்பட்ட அரிசி, பாக்டீரியா வளர்ச்சியின் காரணமாக சரியாகக் கையாளப்படாமலும் சேமித்து வைக்கப்படாமலும் இருந்தால், அது உணவு நச்சுத்தன்மையின் பொதுவான ஆதாரமாகும்.

6. சிக்கன் இறைச்சி

சிக்கன் இறைச்சி உணவு வகைகளை மீண்டும் சூடாக்குவது விஷமாக மாறக் கூடிய அபாயத்தை தரும். சரியான வெப்பநிலையில் மீண்டும் சூடுபடுத்தப்படாவிட்டால் பாக்டீரியாக்கள் அதன் மேற்பரப்பில் பெருகும் அபாயம் இருக்கிறது. அதே சமயம் சிக்கனில் உள்ள புரதங்கள் மீண்டும் சூடுபடுத்தும் போது கடினமாகவும் உலர்ந்ததாகவும் மாறும், இதன் விளைவாக விரும்பத்தகாத அமைப்புகள் ஏற்படும். நம்மூர்ல ஷவர்மா சாப்பிட்டு உயிரிழப்பு, சிக்கன் நூடுல்ஸ் சாப்பிட்டு உயிரிழப்பு என்கிற செய்தியெல்லாம் பழைய சிக்கன் பயன்படுத்தி சமைப்பதினால் மட்டுமல்ல… பழைய சிக்கன் உணவு வகைகளை சூடுபடுத்தி தருவதாலும் கூடத்தான். பொதுவாகவே எந்த இறைச்சி வகையாக இருந்தாலும் சூடு படுத்தாமல் அப்போதைக்கப்போது சாப்பிடுங்க.

7. எண்ணெய்கள்

எண்ணெய்களை மீண்டும் சூடாக்குவது, லிப்பிட் பெராக்சைடுகள் எனப்படும் தீங்கு விளைவிக்கும் சேர்மங்களை உருவாக்கும். இந்த கலவைகள் உடலில் வீக்கம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்
துடன் இணைக்கப்பட்டுள்ளன. எண்ணெய்களை சிக்கனமாகப் பயன்படுத்துவதும், முடிந்தவரை மீண்டும் சூடுபடுத்துவதைத் தவிர்ப்பதும் நல்லது.

மருத்துவக் குணம் நிறைந்தது தேன். ஆரோக்கியம் நிறைந்தது நெய். தினமும் ஒரு சொட்டு நெய்யாவது உணவில் நாம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அளவுக்கு மீறி நெய் சாப்பிட்டால்தான் தவறு. உடல் சூட்டை குறைக்க தினமும் இரண்டு சொட்டு நெய் சாப்பாட்டில் சேர்த்துக் கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லது என்று சொல்லுவார்கள். ஆனால் தேனையும் நெய்யையும் சமஅளவில் கலந்து சாப்பிட்டால் அது நஞ்சாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

நிறைய பேர் விருந்து சாப்பாடு சாப்பிட்டு முடித்த பின்பு, வாழைப்பழம் பாயாசம் பிசைந்து சாப்பிட்டு, அதன் பிறகு தயிர் சாதம் சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். ஆனால் கூடுமானவரை வாழைப்பழம் சாப்பிட்ட பின்பு தயிர் சாப்பிடுவதை குறைக்க வேண்டும். தயிர் சாதம் சாப்பிட்ட பின்பு வாழைப்பழம் சாப்பிடுவதை குறைக்க வேண்டும். இந்த இரண்டையும் தொடர்ந்து ஒன்றாக சாப்பிட்டு வந்தால் உடல் உபாதைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

நெய்யை அதிக நேரம் வெண்கலப் பாத்திரத்தில் வைத்து சாப்பிடக்கூடாது. அடுத்து, சாப்பாடு சாப்பிட்ட உடனேயே, பழ வகைகளை சாப்பிடாதீர்கள். உணவு சாப்பிட்ட ஒரு மணி நேரம் இடைவெளி விட்டு, பழம் சாப்பிடுவது நல்லது. முருங்கைக்கீரை முள்ளங்கி மற்ற கீரை வகைகளை சாப்பிட்ட பின்பு பால் முட்டை இவைகளை சாப்பிடாமல் இருப்பது நல்லது. சமைத்து முடித்த பின்பு, அந்த உணவோடு சமைக்காத பொருளை சேர்த்து சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு கெடுதலை கொடுக்கும்.

உதாரணத்திற்கு சமைத்த உணவில் உப்பு போதவில்லை என்று அப்படியே சாப்பாட்டில் உப்பு போட்டு கலந்து சாப்பிடக்கூடாது. ஏதாவது ஒரு சமயம் இப்படி செய்யலாம் தினம்தோறும் இப்படி செய்யக்கூடாது.ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் சளி தொந்தரவு உள்ளவர்கள் தக்காளிப்பழம், பூசணிக்காய், முள்ளங்கி இப்படி குளிர்ச்சித் தன்மை கொண்டத் காய்கறிகளை அதிகமாகஅப்பளம், வடை, சிக்கன் 65, மீன் போன்ற உணவுகளை ஒருமுறை மட்டுமே எண்ணெயில் பொரிக்க வேண்டும். கடைகளில், ஏற்கெனவே பொரித்தெடுத்த மீன், சிக்கன் 65 உள்ளிட்ட அசைவ உணவுகளை, வாடிக்கையாளர்கள் கேட்கும்போது மீண்டும் பொரித்துக் கொடுப்பார்கள். இந்த உணவுகள் உடல்நலனுக்குக் கெடுதலை ஏற்படுத்தும்.

தொகுப்பு: ஸ்ரீதேவி குமரேசன்

The post விஷமாகும் உணவுகள்… உஷார் ப்ளீஸ்! appeared first on Dinakaran.

Related Stories: