தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் சில தினங்களாக அரிவாள் மற்றும் வாளுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் எடிட் செய்து சமூக வலைதளங்களில் 2 வாலிபர்கள் ரீல்ஸ் பதிவிட்டுள்ளனர். இது வைரலான நிலையில், ஆறுமுகநேரி போலீசார், சமூக வலைதள பதிவுகளை கொண்டு விசாரணை மேற்கொண்டனர்.
இதில் காயல்பட்டினம் பரிமார் தெருவை சேர்ந்த மீராஷா மரைக்காயர் மகன் சேகு நூர்தீன்(24), சுனாமி காலனி சகாப்தீன் மகன் முத்து மொகுதூம் என்ற ஆசிப் அலி(19) ஆகியோர் ஆயுதங்களுடன் ரீல்ஸ் பதிவிட்டது தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், இவர்களிடம் இருந்து அரிவாள், வாள் மற்றும் 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், தங்களை பார்த்து பயப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் இச்செயலில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர். கைதான சேகுநூர்தீன் மீது ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் 2 அடிதடி வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
The post சமூக வலைதளங்களில் அரிவாள், வாளுடன் ரீல்ஸ் வெளியிட்ட 2 பேர் கைது appeared first on Dinakaran.