முதல்வர் மு.க.ஸ்டாலினின் 3 ஆண்டுகால ஆட்சியில் மருத்துவத்துறையில் மலைபோல் சாதனைகள்: 545 விருதுகள் பெற்றுள்ளதாக தமிழ்நாடு அரசு பெருமிதம்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினின் 3 ஆண்டு கால ஆட்சியில் மருத்துவ துறை மலைபோல் சாதனைகள் புரிந்துள்ளதுடன், 545 விருதுகள் பெற்றுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் தரமான மருத்துவ வசதிகள் வழங்கப்பட்டாக வேண்டும் என்னும் வைராக்கியத்துடன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையில் புதிய பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். அத்திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு மகத்தான முறையில் பயனளித்து, தமிழ்நாட்டிற்கு புகழ் சேர்த்து வருகின்றன. கிருஷ்ணகிரி மாவட்ட மலை பகுதி கிரா­மங்­களில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அந்த பகுதி மக்களின் கோரிக்­கை­களை கேட்டறிந்தார். அதுவரை அந்த மலைப்பகுதிக்கு எந்த ஒரு அமைச்சரும் அதிகாரியும் சென்று நேரடியாக மக்களை சந்தித்ததில்லை. அந்த மக்களை தேடி மருத்துவர்கள் சென்று மருத்துவ உதவிகளை வழங்குவதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்க­ளை­ தேடி மருத்­து­வம் என்னும் திட்டத்தை உருவாக்கி கிருஷ்­ண­கிரி மாவட்­டம் சாமனப்பள்ளிக்கு 5.8.2021 அன்று நேரடியாக சென்று அந்த திட்­டத்தை தொடங்கி வைத்தார்.

கடந்த 3 ஆண்டுகளில் இத்திட்டத்தின் வாயிலாக ரூ.632 கோடியே 80 லட்சம் செலவில் 1 கோடியே 85 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். சாலை விபத்துகளில் பாதிக்கப்படுவோரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து உயிர்ப்பலி நேராமல் காப்பாற்றும் நோக்கில் முதல்வரால் உருவாக்கப்பட்ட புதிய திட்டம் இன்னுயிர் காப்போம்-நம்மைக் காக்கும் 48 திட்டம். 18.12.2021 அன்று மேல்­ம­ரு­வத்­தூ­ரில் திட்டத்தை முதல்வர் தொடங்­கி வைத்தார். இத்திட்டத்தின்கீழ் 237 அரசு மருத்துவமனைகள், 455 தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 692 மருத்துவமனைகளில் மருத்துவ சிகிச்சைகள் வழங்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதுவரை இத்திட்டத்தின் மூலம் 2.25 லட்சம் பயனாளிகளுக்கு உடனடி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு, அவர்களது இன்னுயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. தொழி­லா­ளர்­க­ளை தேடி மருத்­து­வம் என்­கிற புதிய திட்டத்தை முதல்வர் உருவாக்கியுள்ளார். அத்திட்டத்தை திருவள்ளூர் மாவட்டம் கடம்­பத்­தூ­ரில் ஹூண்டாய் மொபிஸ் தொழிற்சாலையில் 9.1.2024 அன்று தொடங்கி வைத்தார். இதன் மூலம் இதுவரை 711 தொழிற்சா­லை­க­ளில் 5,27,000 பணியாளர்கள் பரிசோதிக்கப்பட்டு, 26,861 பணியாளர்கள் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கலை­ஞர் வரு­முன் காப்போம் திட்டத்தை 2007ம் ஆண்டு தமிழ்­நாட்­டில் முன்­னெ­டுத்­தார்­.

கடந்த ஆட்­சி­யின் 10 ஆண்டு கால­த்திலும் இத்திட்­டம் புறக்கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், முதல்வர் மு.க.ஸ்டாலின் அந்த வருமுன் காப்­போம் திட்­டம் அளித்த பயன்களை மனதில் கொண்டு, ‘கலை­ஞ­ரின் வரு­முன் காப்­போம்’ என்கிற திட்­ட­மாக பெயர் மாற்றி, மீண்டும் செயல்படுத்தி வருகிறார். கடந்த 3 ஆண்­டு­க­ளில் 4,042 முகாம்கள் நடத்­தப்­பட்டுள்ளன இதுவரை இத்திட்டத்தில் 36 லட்சத்து 69 ஆயிரத்து 326 பேர் பயன்பெற்றுள்ளனர். சிறு­நீ­ர­க பாதிப்­புகளை முன்கூட்டியே அறிந்து உரிய மருத்துவ வசதிகளை வழங்கி மக்­க­ளை பாதுகாப்­ப­தற்காக உருவாக்கிய திட்டம் ‘சிறுநீரக பாதுகாப்பு திட்டம்’. இத்திட்டம் சேலம் மாவட்டம் காடை­யாம்­பட்டியில் 2023 ஜூலை 10ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் 56 லட்சத்து 7 ஆயிரத்து 385 பேர் பயனடைந்துள்ளனர். கலைஞர் காப்பிட்டு திட்டம், தற்போது 1 கோடியே 47 லட்­சம் குடும்பங்களை வாழ்­வித்­துக் கொண்டிருக்­கி­றது. உடல் உறுப்பு தானம் செய்­பவர்­க­ளுக்கு அரசு மரி­யாதை செய்­யப்­ப­டும் என்று 23.9.2023 அன்று அறிவித்து ஊக்கம் தந்து, அரசு மரியாதை அளிக்கப்படுகிறது.

இதுவரை 467 நன்கொடையாளர்களிடம் இருந்து 223 இதயம், 292 நுரையீரல், 409 கல்லீரல், 810 சிறுநீரகம் என மொத்தம் 2,789 உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டு, பலர் வாழ்வு பெற்றுள்ளனர். மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் மூலம் 3 ஆண்டுகளில் 1,947 மருத்­து­வர்கள் உள்பட 3,238 பேர் பணி நிய­ம­னம் செய்­யப்­பட்­டி­ருக்­கி­றார்­கள். அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த முறையில் பணியாற்றி வந்த 1,911 செவிலியர்களுக்கு காலமுறை ஊதியத்தில் பணிநியமனம் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் தற்காலிக முறையில் பணியாற்றி வந்த 1,412 செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையிலான செவிலியர்களாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கிண்டியில் அமைக்கப்பட்ட கலை­ஞர் நூற்­றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை மிகப்­பெ­ரிய அள­வில் பொதுமக்களுக்கு பயன்­பட்­டு­ கொண்­டி­ருக்­கி­றது. உலக வர­லாற்­றில் ஒரு மருத்­து­வ­மனை கட்டி ஓராண்­டிற்­குள் 3 லட்­சத்து 13 ஆயி­ரத்து 864 பேர் அதன்­மூ­லம் பயன் பெற்­றி­ருக்­கி­றார்­கள் என்பது மிகப்பெரிய சாதனையாகும். கலைஞர் நூற்றாண்டு சர்வதேச மருத்துவ மாநாடு சென்னை நந்தம்பாக்கத்தில் நடந்தது. அந்த மாநாட்­டில் அமெ­ரிக்­கா­, இங்­கி­லாந்­து, ஜெர்­ம­னி, சிங்­கப்­பூர், கத்தார், ஆஸ்திரேலியா, கனடா முதலிய 70 நாடுகளில் இருந்து 11,000 பிர­தி­நி­தி­கள் கலந்து கொண்­டார்­கள். அதில் 28 புகழ்­பெற்ற மருத்­துவ வல்­லு­நர்­கள் உரையாற்றினார்­கள்.

கர்ப்­பிணி பெண்­களுக்­கான ஹெபாடிடிஸ் பி சோதனை செய்வ­தில் இந்­தி­யா­வி­லேயே தமிழ்­நாடு முத­லி­டம் என்று விருது பெற்றுள்ளது. தொலை­தூர மருத்­து­வ சேவையில் தமிழ்­நாட்டிற்கு முதல் பரிசு கிடைத்­தி­ருக்­கி­றது. கர்ப்­பி­ணி­க­ளுக்கு மிகவும் தர­மா­ன­ சிகிச்சை அளிக்கிறது தமிழ்­நாடு என்று பாராட்டப்பட்டு இந்­தி­யா­வில் சிறந்த மாநி­லம் என விருது வழங்கப்பட்டுள்ளது. பள்ளி சுகாதா­ரம் மற்­றும் ஆரோக்­கிய தூது­வர் திட்­டத்­தில் இந்­தி­யா­வில் முதல் மாநி­லம் எனத் தமிழ்நாட்டிற்கு விருது கிடைத்துள்ளது. தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அறுவை சிகிச்­சையில் சிறந்த மாநிலம் என்னும் விருதும், தமிழ்­நாடு மாநில எய்ட்ஸ் கட்­டுப்­பாடு சங்­கத்­திற்கு சிறந்த சேவை விருதும் வழங்கப்பட்டுள்ளன. தேசிய தர உறுதி நிர்­ண­ய விருது 2012ல் ஒன்றிய அரசினால் உரு­வாக்­கப்­பட்­டது. அதன்மூலம், 2012 முதல் 2021 வரை 9 ஆண்டு கால முந்தைய ஆட்­சி­யில் தமிழ்நாட்டிற்கு 79 விருதுகள் மட்டுமே கிடைத்துள்ளன. முதல்வர் மு.க.ஸ்டாலின் இத்துறைக்கு அளித்துவரும் ஊக்கம் காரணமாக 3 ஆண்டுகளில் 545 விருதுகளை பெற்று திராவிட மாடல் ஆட்சி போற்றப்படுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலினின்அரசு புகழ் மகுடத்தின் உச்சியில் மாணிக்கமாய் ஒளிர்கிறது.

The post முதல்வர் மு.க.ஸ்டாலினின் 3 ஆண்டுகால ஆட்சியில் மருத்துவத்துறையில் மலைபோல் சாதனைகள்: 545 விருதுகள் பெற்றுள்ளதாக தமிழ்நாடு அரசு பெருமிதம் appeared first on Dinakaran.

Related Stories: