திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே வீரகநல்லூர் ஊராட்சி பகத்சிங் நகர் இருளர் காலனியில் குழந்தைகள் விளையாட ஏதுவாக சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது. நேற்று தொடக்க விழா நிகழ்ச்சியில் திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் தீபா கலந்துக்கொண்டு குழந்தைகள் பூங்கா திறந்துவைத்தார். ஜேஎம்ஜே தொண்டு நிறுவனம் மற்றும் லின்சி பவுண்டேஷன் பொருளுதவியுடன் குழந்தைகள் பூங்கா அமைக்கப்பட்டது. ஜேஎம்ஜே நிறுவன திட்ட அலுவலர் லிசினா மேரி திட்ட விளக்க உரை ஆற்றினார். தமிழ் நாடு மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட தலைவர் சின்னதுரை மாவட்ட குழு உறுப்பினர் அந்தோணி திருத்தணி வருவாய் ஆய்வாளர் கணேஷ் குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
The post குழந்தைகள் பூங்கா திறப்பு விழா appeared first on Dinakaran.