ஊத்துக்கோட்டை, டிச. 30: பெரியபாளையம் ஊராட்சியில், 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு, வரலாற்று சிறப்பு மிக்க பவானி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வார்கள். மேலும், இப்பகுதியில் வங்கிகள், நகை மற்றும் அடகு கடைகள் பெரிய அளவில் வணிக நிறுவனங்கள் உள்ளது.
இந்த பகுதியில் திருட்டு நடக்காமல் இருக்கவும், ஆடித்திருவிழா காலங்களில் போக்குவரத்து நெரிசல், செயின் திருட்டு, தகராறு அல்லது பிக்பாக்கெட் நடைபெறுவதை கண்டறியவும், பெரியபாளையம், வடமதுரை கூட்டுச்சாலை, தண்டலம் ஆகிய பகுதிகள் என 25க்கும் மேற்பட்ட இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பெரியபாளையம் காவல்துறை சார்பில் வைக்கப்பட்டது.
ஆனால், இப்பகுதியில் உள்ள ஒரு சில இடங்களில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் பழுதடைந்துள்ளது. இதனால், இப்பகுதியில் திருட்டு, வழிப்பறி போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. எனவே, பொதுமக்கள் நலனை கருத்தில்கொண்டு சம்மந்தப்பட்ட காவல் துறையினர், பழுதடைந்துள்ள சிசிடிவி கேமாராக்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
The post பெரியபாளையத்தில் பழுதடைந்துள்ள சிசிடிவி கேமராக்களை சீரமைக்க வேண்டும்: சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.