திருத்தணி முருகன் கோயிலில் 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம்

 

திருத்தணி, டிச. 30: திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோயிலில் நேற்று அதிகாலை மூலவருக்கு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டதை தொடர்ந்து தங்க, வைர ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, ஏராளமான பக்தர்கள் சரவண பொய்கை திருக்குளம் வழியாக திருப்படிகள் ஏறி மலைக்கு வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

வாகனங்களில் மலைக் கோயிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்ததால், மலைக்கு செல்ல வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டு மலைப்பாதையில் பக்தர்கள் நடந்து சென்று சாமி தரிசனம் செய்தனர். ஓம் சக்தி மாலை அணிந்த பெண் பக்தர்கள் மற்றும் ஆறுபடை தரிசனம் பக்தர்கள் குழுவினர் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

இதனால், பொது வரிசையில் 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ரூ.100 சிறப்பு தரிசனம் பொறுத்தவரை 2 மணி நேரத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். நாளை திருப்படி திருவிழா மற்றும் ஆங்கில புத்தாண்டு விழாவையொட்டி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.

The post திருத்தணி முருகன் கோயிலில் 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: