மாரியம்மன் கோயிலில் கொள்ளைக்காரன் பூஜை

கமுதி, செப்.20: கமுதி முத்துமாரியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த கோயிலாகும். சுமார் 300 வருடங்களுக்கு முன்பு இப்பகுதிக்கு கொள்ளையடிக்க வந்த திருடர்களை அம்மன்தனது சக்தியால் விரட்டியடித்தாக, இக்கோயிலுக்கு வரலாறு உள்ளது. புரட்டாசி முதல் தேதி நடைபெற்ற இச்சம்பவத்தை நினைவு கூறும் வகையில், வருடா வருடம் கடந்த 300 வருடங்களுக்கு மேலாகஇந்த புரட்டாசி முதல் தேதி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த கொள்ளைகாரன் பூஜை அம்மனுக்கு நடைபெற்றது. இதில் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

The post மாரியம்மன் கோயிலில் கொள்ளைக்காரன் பூஜை appeared first on Dinakaran.

Related Stories: