புதுகை எஸ்பி அலுவலகத்தில் பெண் தற்கொலை முயற்சி

 

புதுக்கோட்டை,செப்.20: புதுக்கோட்டை எஸ்பி அலுவலகத்தில் தூக்கமாத்திரை சாப்பிட்டு ஒரு பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியை சேர்ந்தவர் பூபதி (45). இவரை குடும்ப பிரச்சனை காரணமாக , இவரது கணவரின் தம்பி குடும்பத்தினர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

அதை தொடர்ந்து நேற்று புதுக்கோட்டை மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு புகார் அளிக்க வந்த பூமதி மயங்கி விழுந்தார். அப்போது அங்கிருந்தவர்கள் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தான் 5 தூக்க மாத்திரைகளை சாப்பிட்டதாக, அவர் தெரிவித்துள்ளார். அதை தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post புதுகை எஸ்பி அலுவலகத்தில் பெண் தற்கொலை முயற்சி appeared first on Dinakaran.

Related Stories: