ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

சிங்கம்புணரி செப். 20: சிங்கம்புணரியில் உயர்வுக்கு படி வழிகாட்டு நிகழ்ச்சி நேற்று சிங்கம்புணரியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதற்காக வருகை தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுத்து சிங்கம்புணரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு காலை 8.50 மணிக்கு திடீர் ஆய்வு செய்தார். அப்போது வெளியூர்களில் இருந்து வரும் ஆசிரியர்கள் சிலர் தாமதமாக வந்ததை கண்டித்தும் ஆசிரியர்களை ஒருமையிலும் தரக்குறைவாகவும் பேசியதாக கூறப்படுகிறது.

இதை கண்டித்து பள்ளி வேலை நேரம் முடிந்ததும் 40க்கும் மேற்பட்ட பெண் ஆசிரியர்கள் பள்ளியின் உள்ளே அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். மாவட்ட கல்வி அலுவலர் வடிவேல் ஆசிரியரிடம் போராட்டம் குறித்து விளக்கம் கேட்டார். இதுகுறித்து ஆசிரியர்கள் கூறும்போது, ‘‘மாணவிகளின் முன்பு ஆசிரியர்களை ஒருமையில் பேசுவது தவறான முன்னுதாரணமாகும’’ என்றனர்.

The post ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: