இன்று முதல் 3 நாட்களுக்கு பாஸ்போர்ட் சேவை இணையதளம் இயங்காது: மண்டல அதிகாரி விஜயகுமார் தகவல்

சென்னை: சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி எஸ். விஜயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை: தொழில்நுட்ப பராமரிப்பு பணிகள் காரணமாக பாஸ்போர்ட் சேவை இணையதளம் (www.passportindia.gov.in) இன்று இரவு 8 மணி முதல் வரும் 23ம் தேதி காலை 6 மணி வரை இயங்காது. பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களுக்கு இந்த 3 நாட்கள் பாஸ்போர்ட் சேவை இணையதளத்தை பயன்படுத்த முடியாது. எனவே, விண்ணப்பதாரர்கள் அப்பாயிண்ட்மெட்/ கேள்விகளுக்கு திட்டமிடப்பட்ட பராமரிப்புக்குப் பிறகு பாஸ்போர்ட் சேவை இணையதளத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

The post இன்று முதல் 3 நாட்களுக்கு பாஸ்போர்ட் சேவை இணையதளம் இயங்காது: மண்டல அதிகாரி விஜயகுமார் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: