மும்பை:மாஜி மும்பை போலீஸ் கமிஷனர் சஞ்சய் பாண்டே நேற்று காங்கிரசில் இணைந்தார். மும்பை போலீஸ் கமிஷனராக இருந்தவர் சஞ்சய் பாண்டே. பொறுப்பு டிஜிபியாகவும் அவர் பதவி வகித்துள்ளார். இந்த நிலையில் மாஜி போலீஸ் கமிஷனர் சஞ்சய் பாண்டே, வட மத்திய மும்பை எம்பி வர்ஷா கெய்க்வாட் முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார். சஞ்சய் பாண்டே பேசுகையில்,‘‘ 2004ம் ஆண்டு காங்கிரசில் சேர விரும்பினேன். ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது புதிய அரசியல் இன்னிங்சை ஆரம்பித்துள்ளேன். ஓய்வு பெற்ற போலீஸ் கமிஷனரான என் மீதே பொய் வழக்குகள் போடப்பட்டன’’ என்றார்.
The post மும்பை மாஜி போலீஸ் கமிஷனர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் appeared first on Dinakaran.