மதுரையில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெயில் நேற்று பதிவாகியுள்ளது. மதுரையில் நேற்று 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது, செப்டம்பரில் இதுவே அதிகபட்சமான வெயில் ஆகும். மே மாதத்தில் பதிவாகும் வெப்ப அலைக்கு நிகராக செப்டம்பர் மாதத்தில் மதுரையில் நேற்று அதிகபட்ச வெயில் பதிவானது.
சென்னையில் நேற்று 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியிருப்பது செப்டம்பரில் இதுவே முதல்முறை. 22 ஆண்டுகளுக்குப் பின் செப்டம்பர் மாதத்தில் நேற்று சென்னையில் அதிகபட்ச வெயில் பதிவாகி உள்ளது. கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் என தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் வெயில் சுட்டெரிக்கிறது.
மதுரையில் இன்றும் 105 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் சுட்டெரிக்கும். சென்னையில் இன்றும் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரிக்கும். செப்டம்பர் 20-க்கு பிறகு ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு, 25-ம் தேதிக்கு பிறகு அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் பேட்டி அளித்துள்ளார்.
The post 22 ஆண்டுகளுக்குப் பின் செப்டம்பர் மாதத்தில் சென்னையில் அதிகபட்ச வெயில் பதிவு: தனியார் வானிலை ஆய்வாளர் பேட்டி appeared first on Dinakaran.