கரூர் : கரூர் சுங்ககேட் முதல் தான்தோன்றிமலை வரை 1.25 மீட்டர் தூரத்திற்கு ரூ.5 கோடி மதிப்பில் வடிகால் பகுதிகள் மேல்புறம் பேவர் பிளாக் அமைத்து பணி நிறைபெற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிடப்பட்டுள்ளதால் மகிழ்ச்சி அடைந்தனர்.தமிழகம் முழுவதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் மாநிலத்தில் உள்ள சாலைகள் அதிக அளவில் தேசிய சாலைக்கு நிகராக தரம் உயர்த்தப்பட்டு பணிகள் நடை பெற்று வருகின்றன. கரூர் முதல் ‘திண்டுக்கல் வரை குஜிலியம்பாறை வழியாக நெடுஞ்சாலைத்துறை சார்பில் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. மேலும், மாநகராட்சி பகுதிகளில் சாலைகளை மேம்படுத்து நோக்கில் சாலையின் இருபுறமும் வடிகால் வசதியுடன் கூடிய பணிகள் நடைபெற்று வருகிறது.
இதில், மழை காலங்களில் செல்லும் மழைநீர் எளிதாக இரு புறமும்மஉள்ள வடிகால் உள்ளே செல்வதற்கு வசதியாக 20 அடிக்கு ஒரு இடத்தில் வலையுடன் கூடிய துளை அமைக்கப்பட்டுள்ளது. தாந்தோன்றிமலை, குடித்தெரு சிண்டிகேட்ப குதி, காவேரி நகர், தான் தோன்றி மலை சாலை ஆகியபகுதிகளில் உள்ளவீடு களில் மழைநீர் தேங்காமல் நேரடியாக வடிகால் வசதி பகுதிக்கு செல்லுமாறு பணிகள் நிறைவு பெற்றுள்ளது.
மேலும் சாலையின் இரு புறமும் மரங்களை அகற்றாமல் மரங்களைச் சுற்றி மரங்களின் வேர் பகுதியிற்கு தண்ணீர் இறங்கும் வகையில் பேவர் பிளாக் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், வடிகால் பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்வ தற்கு ஏற்றார் போல் பேவர் பிளாக் பதிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வந்தன. மேலும், மழைக்காலத்தில் வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் பயன்பெறும் வகையில் சாலையில் இருபுறமும் பேவர் பிளாக் பதிக்கும் பணி, வடிகால் பணிகள் நிறைவு பெற்றதையடுத்து, பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
The post கரூர் சுங்ககேட் முதல் தான்தோன்றிமலை வரை ₹5 கோடியில் பேவர் பிளாக் நடை பாதை appeared first on Dinakaran.