விநாயகர் சிலை ஊர்வலத்தில் விதி மீறலில் ஈடுபட்ட இந்து முன்னணி அமைப்பினர் 63 பேர் மீது வழக்குப்பதிவு

 

சென்னை: விநாயகர் சிலை ஊர்வலத்தில் விதி மீறலில் ஈடுபட்ட இந்து முன்னணி அமைப்பினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி விழாவானது கடந்த செப்.7ஆம் தேதி நாடு முழுவதும் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 1,524 விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்ய அனுமதி வழங்கப்பட்டதன் பேரில், பல்வேறு அமைப்பினர் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்து வந்தனர்.

இந்த நிலையில், ஊர்வலம் அமைதியான முறையிலும், எவ்வித அசம்பாவிதமும் நிகழாமல் தடுக்க சென்னையில் காவல் ஆணையர் மற்றும் 3 கூடுதல் ஆணையர்கள் தலைமையில் 16,500 காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள், 2,000 ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 18,500 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விநாயகர் சிலைகளைக் கரைக்க அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளைக் கொண்டு சென்று கரைக்க வேண்டும் என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னை பெருநகர காவல் ஆணையரகத்திற்குட்பட்ட சீனிவாசபுரம், பட்டினப்பாக்கம், பல்கலைநகர், நீலாங்கரை, காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் கடற்கரை பகுதிகளில் விநாயகர் சிலைகளைக் கரைக்க காவல் துறையினரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ள 4 இடங்களில் சிலைகள் கரைக்க சென்னையில் 17 வழித்தடங்கள் பிரத்யேகமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சிலை கரைக்கும் இடங்களில் தற்காலிக கட்டுப்பாட்டு அறைகள் மற்றும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. சிலைகளைக் கரைப்பதற்கு Conveyor Belt, கிரேன்கள், படகுகள் உதவி கொண்டு சிலைகளைக் கரைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் மசூதிக்கு அருகே மேளதாளம் முழங்க விநாயகர் சிலை ஊர்வலம் நடந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்து அமைப்பினர் கூச்சலிட்டனர். சென்னை திருவல்லிக்கேணி பாரதி சாலை வழியாக நேற்று விநாயகர் சிலைகளை கடலில் கரைப்பதற்கு ஊர்வலமாக கொண்டு சென்றபோது போலீசார் அனுமதிக்கப்பட வழியில் செல்லாமல், அப்பகுதியில் உள்ள பெரிய மசூதி தெரு வழியாக செல்ல முற்பட்ட இந்து முன்னணி அமைப்பினர் 61 பேர் மீது ஜாம் பஜார் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

The post விநாயகர் சிலை ஊர்வலத்தில் விதி மீறலில் ஈடுபட்ட இந்து முன்னணி அமைப்பினர் 63 பேர் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Related Stories: