அப்போது ராமேஸ்வரத்திலிருந்து மலேஷிய சுற்றுலா பயணிகள் வந்த டெம்போ வாகனமும், தஞ்சாவூரிலிருந்து டேனியல் ஓட்டி சென்ற காரும் மார்க்கண்டேயன்பட்டி என்ற பகுதியில் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் காரில் சென்ற 4 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தந்தை அவரது இரு மகள்கள், சித்தப்பா ஆகியோர் பலியான தகவல் தெரிந்த உறவினர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தனர். மலேஷிய சுற்றுலா பயணிகள் 4 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் தேவகோட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றனர். பின்னர் காரைக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து தேவகோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post தேவகோட்டை அருகே மலேசிய சுற்றுலா பயணிகள் வந்த வாகனமும் காரும் மோதிக் கொண்ட விபத்து: 4 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.