ஆரல்வாய்மொழி: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை பூ சந்தையில் ஓணம் பண்டிகையையொட்டி பூக்கள் விற்பனை அமோகமாக நடைபெறும். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக ஓணம் பண்டிகையின்போது கேரள மாநிலத்தில் நிலச்சரிவு, கொரோனா உள்ளிட்டவை ஏற்பட்டது. இதனால் தோவாளை மலர் சந்தையிலும் விற்பனை பாதித்தது. இந்த நிலையில் நடப்பாண்டில் கேரளாவில் நிலச்சரிவு பாதிப்பு ஏற்பட்டது. எனினும் ஓணம் பண்டிகையையொட்டி பூ விற்பனை அதிகமாக இருக்கும் என விவசாயிகள் அதிகளவில் பூக்களை விற்பனைக்கு குவித்தனர்.
அதன்படி இன்று சந்தைக்கு 300 டன் பூக்கள் கொண்டு வரப்பட்டன. ஆனால் இன்று கேரளாவில் இருந்து வியாபாரிகள், பொதுமக்கள் வருகை குறைந்தது. இதனால் அதிகாலை தொடங்கிய சந்தையில் சுமார் 150 டன் பூக்கள் மட்டுமே விற்பனையானது. 150 டன் பூக்கள் தேக்கம் அடைந்துள்ளன.
The post கேரள வியாபாரிகள் வருகை இல்லை: தோவாளை சந்தையில் 150 டன் பூக்கள் தேக்கம் appeared first on Dinakaran.