சென்னை: மிலாது நபி விடுமுறை காரணமாக செப்.17ம் தேதி அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் ஒருநாள் முன்னதாக செப்.16ம் தேதி வர சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரிஎஸ்.விஜயகுமார் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மத்திய அரசு ஊழியர் நல ஒருங்கிணைப்புக் குழுவின்படி, செப்.16ம் தேதிக்கு பதிலாக செப்.17ம் தேதி (செவ்வாய்க்கிழமை) மிலாது நபி பொது விடுமுறை கடைபிடிக்கப்படும். செப்.17 அன்று கொடுக்கப்பட்ட அனைத்து சந்திப்பு நேரங்களும், செப்.16ம் தேதிக்கு ஒருநாள் முன்னதாக மாற்றப்பட்டுள்ளது. செப்.17ம் தேதி உறுதி செய்யப்பட்ட சந்திப்பு நேரம் பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் சந்திப்புகள் குறித்து குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்படும். பாஸ்போர்ட் சேவை மையங்கள், சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் கீழ் உள்ள தபால் அதிகாரி பாஸ்போர்ட் சேவை மையங்கள், சென்னை அண்ணா சாலையில் உள்ள முதன்மை அலுவலகம் செப்.17ம் தேதி மூடப்பட்டிருக்கும்.
The post மிலாது நபி விடுமுறை விண்ணப்பதாரர்கள் சந்திப்பு நேரம் மாற்றம்: பாஸ்போர்ட் அலுவலகம் தகவல் appeared first on Dinakaran.