திசையன்விளை: திசையன்விளை வி.எஸ்.ஆர்.இண்டர்நேசனல் பள்ளியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதில் பள்ளி தாளாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் தலைமை வகித்தார். இயக்குநர் சவுமியா குத்துவிளக்கு ஏற்றினார். முதல்வர் பாத்திமா எலிசபெத் வரவேற்றார். ஆசிரியர்கள் கேரள பாரம்பரிய உடை அணிந்து மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாக பூக்கோலமிட்டு இறைவனுக்கு படையலிட்டனர்.
தொடர்ந்து கேரள பாரம்பரிய நடனம் ஆடினர். மாணவர்கள் விழா கொண்டாடுவதற்கான காரணத்தை குறுநாடகம் மூலம் வெளிப்படுத்தினர்.தொடர்ந்து மாணவிகளின் நடனம் நடந்தது.
The post திசையன்விளை வி.எஸ்.ஆர். பள்ளியில் ஓணம் பண்டிகை appeared first on Dinakaran.