அங்கு பயிற்சி பெற்று வந்த மாரியப்பன், சர்வதேச அளவில் தீயணைப்பு துறை வீரர்களுக்கான தடகள போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க தகுதி பெற்றார். அதைத்தொடர்ந்து டென்மார்க் நாட்டில் நடக்கும் தீயணைப்பு வீரர்களுக்கான உலகளவிலான தடகள போட்டிகளில் பங்கேற்றுள்ள மாரியப்பன் 200 மீட்டர், 400 மீட்டர், 800 மீட்டர், 1500 மீட்டர் ஆகிய ஓட்டப் பந்தயங்களிலும் முதலிடம் பிடித்து 4 தங்க பதக்கங்களை வென்றார். மாரியப்பன் சாதனையை, நெல்லை மாவட்ட தீயணைப்புத்துறையினர் நெல்லையில் நேற்று உற்சாகமாக கொண்டாடினர்.
The post டென்மார்க் உலக தடகளம்: நெல்லை மாரியப்பன் சாதனை appeared first on Dinakaran.