பறிமுதல் செய்த குட்கா பொருட்களிலிருந்து வழக்கு போடுவதற்காக சட்டபூர்வ மூன்று உணவு மாதிரி எடுத்தது போக மீதமுள்ள பான்பராக் குட்கா போன்ற பொருட்களையும் மேற்படி இரண்டு வாகனங்களையும், கிருஷ்ணமூர்த்தி, ஒட்டுநர் போசாங்கு மற்றும் நல்லுசாமி ஆகிய மூன்று நபர்களையும் மணிகண்டம் காவல் நிலையத்தில் மேல் நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டு புகார் அளிக்கப்பட்டது. மேலும் இதனை தொடர்ந்து மேற்படி போசாங்கு என்பவரை விசாரித்ததின் பேரிலும் இன்று 11.09.2024 வரபெற்ற தகவலின் அடிப்படையிலும் மதியம் 2 மணிக்கு திருச்சிராப்பள்ளி மாவட்டம், பஞ்சப்பூர் அருகே பிரபல பார்சல்,அலுவலகம் சென்று கண்டெய்னர் லாரி KA01AH4849 வாகனத்தை சோதனை செய்த பொழுது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான்பராக் மற்றும் குட்கா பொருட்கள் 190 கிலோ இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தடைசெய்யப்பட்ட பான்பராக் மற்றும் குட்கா பொருட்களிலிருந்து வழக்கு போடுவதற்காக சட்டபூர்வ நான்கு உணவு மாதிரிகள் எடுத்து பகுப்பாய்விற்கு அனுப்பட்டது.
மேற்படி பார்சல் சர்வீஸ் வாகனம் KA01AH4849- யும், மூன்று சட்டபூர்வ உணவு மாதிரி எடுத்தது போக மீதமுள்ள பான்பராக் மற்றும் குட்கா பொருட்களையும் மேலும் மேற்கண்ட மூன்று நபர்களையும் எடமலைப்பட்டிபுதூர் காவல் நிலையத்தில் மேல் நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டது. தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பான்பராக், குட்கா பொருட்களை விற்பனை செய்ததற்கு உடந்தையாக இருந்த பார்சல் அலுவலக மேலாளர் கருணாநிதி த/பெ பழனி, ஓட்டுநர் செந்தில், போசாங்கு மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்க கோரி எடமலைபட்டிபுதூர் காவல் நிலையத்தில் புகார்மனு அளிக்கப்பட்டது. மேலும் இது போன்ற தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் அல்லது கலப்பட உணவு பொருட்கள் கண்டறியபட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்களுக்கு புகார் தெரிவிக்கலாம், தங்கள் தகவல் இரகசியம் காக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
The post ஓலையூர் அருகே மளிகை கடையில் பான்பராக் மற்றும் குட்கா பொருட்கள் பறிமுதல்: உரிமையாளர் கைது appeared first on Dinakaran.