இந்த சூழலில், நேற்று முன்தினம் கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த செருதூர் பகுதி மீனவர்களின் பைபர் படகு மீது இலங்கை கடற்படை கப்பல் மோதி ஏற்பட்ட விபத்தில் நான்கு மீனவர்கள் கடலில் தத்தளித்தனர். பின்னர் சக மீனவர்களின் உதவியோடு கரை திரும்பிய நான்கு மீனவர்களும் ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த நிலையில், இலங்கை கடற்கொள்ளையர்கள் மற்றும் கடற்படையினரை கண்டித்து 2,500-க்கும் மேற்பட்ட செருதூர் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் 400-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
The post இலங்கை கடற்படையினர் தாக்குதலை கண்டித்து 2,500க்கும் மேற்பட்ட நாகை மீனவர்கள் வேலை நிறுத்தம் appeared first on Dinakaran.