உளுந்தூர்பேட்டை, செப். 12: உளுந்தூர்பேட்டை அருகே அடுத்தடுத்து 2 லாரி, 2 பேருந்து மோதிய விபத்தில் 10 பேர் படுகாயம் அடைந்தனர். சென்னையில் இருந்து டேங்கர் லாரி திருச்சி நோக்கி சென்றது. லாரி நேற்று அதிகாலை உளுந்தூர்பேட்டை அடுத்த மேட்டத்தூர் அருகே சென்றபோது பின்னால் சென்ற தனியார் டிராவல்ஸ் பேருந்து டேங்கர் லாரியின் பின்பகுதியில் மோதியது. இதில் நிலைத்தடுமாறிய டேங்கர் லாரி தேசிய நெடுஞ்சாலையின் மற்றொரு சாலைக்கு சென்று அந்த வழியாக எதிரே உளுந்தூர்பேட்டை நோக்கி சென்ற மினி லாரி, டிராவல்ஸ் பேருந்து மீது மோதியது.
அடுத்தடுத்து 2 லாரிகள் மற்றும் 2 தனியார் டிராவல்ஸ் பேருந்துகள் மோதிக்கொண்டதால் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற திருநாவலூர் இன்ஸ்பெக்டர் இளையராஜா மற்றும் போலீசார் லாரி டிரைவர்கள் மற்றும் பேருந்தில் சென்ற பயணிகள் உள்ளிட்ட படுகாயம் அடைந்த 10 பேரை மீட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்துக்குள்ளான 4 வாகனங்களையும் கிரேன் மூலம் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். விபத்து குறித்து திருநாவலூர் இன்ஸ்பெக்டர் இளையராஜா மற்றும் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
The post உளுந்தூர்பேட்டை அருகே 2 லாரி, 2 பேருந்து அடுத்தடுத்து மோதி 10 பேர் படுகாயம் appeared first on Dinakaran.