விளிம்புநிலை மக்களுக்காக பாடுபட்ட இமானுவேல்சேகரன் நினைவை போற்றி வணங்கிடுவோம்: எல்.முருகன் டிவிட்

சென்னை: இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தை முன்னிட்டு ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் வெளியிட்ட டிவிட்டர் பதிவு: சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்த, சுதந்திரப் போராட்ட தியாகி அய்யா இமானுவேல் சேகரனின் 67வது நினைவு தினம் செப்டம்பர் 11. சுதந்திரப் போரின் மிகவும் முக்கியமான இயக்கமாக பங்கு வகித்த வெள்ளையனே வெளியேறு போராட்டம் மற்றும் ராணுவப் பணி என பல்வேறு படிநிலைகளில் பாரத சுதந்திரத்திற்காகவும், சமுதாயப் பணிகளுக்காகவும் தன்னை அர்ப்பணித்து வாழ்ந்தவர். தேசத்தின் விடுதலைக்காகவும், விளிம்புநிலை சமுதாய மக்களின் உரிமைக்காகவும் பெரிதும் பாடுபட்ட தியாகி இமானுவேல் சேகரனின் நினைவை போற்றி வணங்கிடுவோம்.

பாரதியின் பங்களிப்பு: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் வெளியிட்ட மற்றொரு பதிவு: சுப்பிரமணிய பாரதியாரின் நினைவு தினம் செப்டம்பர்11. தேசப்பக்தி பாடல்கள், நவீன தமிழ் கவிதைகள் மற்றும் பெண்ணியக் கவிதைகள் என்று புரட்சி செய்த பாரதியாருக்கு, கடந்த 2021ம் ஆண்டு வாரணாசி பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் இருக்கை அளித்து, பிரதமர் மோடி, கவுரவித்து பெருமைப்படுத்தியுள்ளார். மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நினைவு தினத்தில் அவர்தம் பங்களிப்புகளை நினைவு கூர்ந்து போற்றுவோம்.

The post விளிம்புநிலை மக்களுக்காக பாடுபட்ட இமானுவேல்சேகரன் நினைவை போற்றி வணங்கிடுவோம்: எல்.முருகன் டிவிட் appeared first on Dinakaran.

Related Stories: