நிலக்கடலைகாய் ரூ.2.31 லட்சத்துக்கு ஏலம்

கொடுமுடி, டிச. 20: கொடுமுடி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 111 நிலக்கடலைகாய் மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இது ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 60 ரூபாய் 19 காசுக்கும், அதிகபட்ச விலையாக 72 ரூபாய் 50 காசுக்கும், சராசரி விலையாக 71 ரூபாய் 20 காசுக்கும் ஏலம் போனது. மொத்தம் 37.35 குவிண்டால் எடையுள்ள நிலக்கடலைகாய் 2 லட்சத்து 31 ஆயிரத்து 183 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றது. இத்தகவலை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

The post நிலக்கடலைகாய் ரூ.2.31 லட்சத்துக்கு ஏலம் appeared first on Dinakaran.

Related Stories: