கடையநல்லூரில் நாளை மின்தடை

 

கடையநல்லூர்,செப்.10: கடையநல்லூரில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின் விநியோகம் நாளை (11ம் தேதி) இருக்காது என்று மின்வாரிய செயற்பொறியாளர் கற்பக விநாயக சுந்தரம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடையநல்லூர் துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட கடையநல்லூர், முத்துகிருஷ்ணாபுரம், மாவடிக்கால், குமந்தாபுரம், தார்காடு, போகநல்லூர், மங்களாபுரம், இடைகால், கொடிக்குறிச்சி மற்றும் நயினாரகரம் உள்ளிட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (11ம் தேதி) நடக்கிறது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

The post கடையநல்லூரில் நாளை மின்தடை appeared first on Dinakaran.

Related Stories: