திருப்பதி ஏழுமலையான் கோயிலில் திருநாமம் வைக்கும் திட்டம் மீண்டும் தொடங்கியது

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தரிசன வரிசைகளுக்கு செல்லும் முன்பு திருநாமம் வைக்கும் திட்டம் நடைமுறையில் இருந்து வந்தது. இந்நிலையில், இடையில் கொரோனா தொற்று காரணமாக திருநாமம் வைக்கும் வைபவம் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது மீண்டும் அந்த திட்டத்தை செயல் அதிகாரி ஷியாமளா ராவ் நேற்று தொடங்கி வைத்தார். ₹300 டிக்கெட் ஆன்லைனில் பெற்ற பக்தர்கள் வரிசையில் அனுமதிக்கும் ஏ.டி.சி. சந்திப்பு நுழைவில் பக்தர்களுக்கு வாரி சேவா தன்னார்வலர்கள் மூலம் திருநாமம் வைக்கப்பட்டது. இதற்கு பக்தர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து செயல்அதிகாரி ஷியாமளா ராவ் கூறுகையில், ‘கொரோனா காலத்திற்கு முன்பு பக்தர்களின் விருப்பத்திற்கு ஏற்ப திருநாமம் வைக்கப்பட்டு வந்தது. கொரோனா தொற்றால் தொடுதல் கூடாது என்பதால் திருநாமம் வைக்கும் திட்டம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் பக்தர்களுக்கு திருநாமம் வைக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக ஏ.டி.சி சந்திப்பு, வராக சுவாமி கோயில், வைகுண்டம் காம்பளக்ஸ், கோயில் முன்பு, வடக்கு மாடவீதி நுழைவில் இருஷிப்டுகளாக வாரி சேவா தன்னார்வலர்கள் மூலம் வைக்கப்படும்’ என கூறினார்.

The post திருப்பதி ஏழுமலையான் கோயிலில் திருநாமம் வைக்கும் திட்டம் மீண்டும் தொடங்கியது appeared first on Dinakaran.

Related Stories: