திண்டிவனத்தில் லஞ்சஒழிப்பு போலீஸ் ரெய்டு சார்பதிவாளர் ஆபீசில் ரூ.40 லட்சம் பறிமுதல்: பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சந்தைமேடு பகுதியில் உள்ள அவரப்பாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் நேற்று மாலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த கோவிந்தம்மாள் நிலம் விற்பனை செய்த பணம் ரூ.40 லட்சத்தை வைத்திருந்தார். அந்த பணத்தை அதிகாரிகள் விசாரணை செய்வதற்காக பறிமுதல் செய்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கோவிந்தம்மாள் மயங்கி விழுந்தார்.

இதையடுத்து பெண்ணிடம் அந்த பணத்தை போலீசார் வழங்கி விட்டனர். இதையடுத்து, சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் வளாகத்தில் உள்ள பத்திர எழுத்தர்கள் அலுவலகங்கள் அனைத்தையும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர சோதனை செய்தனர். இதில் கணக்கில் வராத 1 லட்சத்து 8 ஆயிரம் ரொக்கப்பணம், ரூ.25,000 மதிப்பிலான வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல், ஈரோடு மாவட்டம் கோபி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சோதனையில் புரோக்கர்கள், அலுவலர்களிடம் இருந்து ரூ.1.34 லட்சம், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

 

The post திண்டிவனத்தில் லஞ்சஒழிப்பு போலீஸ் ரெய்டு சார்பதிவாளர் ஆபீசில் ரூ.40 லட்சம் பறிமுதல்: பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: