156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணை நீர்மட்டம் 99.30 அடியாக உள்ளது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் நீரிருப்பு 78.16 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 513.46 கனஅடியாகவும், வெளியேற்றம் 35 கனஅடியாகவும் உள்ளது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பருவமழையின் தீவிரத்தையடுத்து பிசான சாகுபடி பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு இடங்களில் இயந்திரங்கள் மூலம் வயல்களை உழுது, தொழி அடிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அருகன்குளம், பாலாமடை, கட்டளை, ராஜவல்லிபுரம் பகுதிகளில் விவசாயிகள் நடுவை பணிகளையும் தொடங்கி இருக்கின்றனர். விவசாய தொழிலாளர்கள் ஒரு வயலை நட்டு முடித்தவுடன், சிறிது நேர ஓய்வுக்கு பின்னர், பக்கத்து ஊருக்கு சென்று நடுவை பணிகளை தொடர்ந்து வருகின்றனர். குளங்களுக்கு தண்ணீர் வரத்தை பொறுத்து, சில கிராமங்களில் நடுவை பணிகளை தொடங்கும் எண்ணத்தில் உள்ளனர்.
The post நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பிசான சாகுபடி பணிகள் மும்முரம் appeared first on Dinakaran.