இப்போட்டி 1 மணி, 13 நிமிடத்துக்கு நடந்தது. ஆண்கள் ஒற்றையர் காலிறுதியில் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸுடன் மோதிய ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரவ் 6-7 (2-7), 6-3, 4-6, 6-7 (3-7) என்ற செட் கணக்கில் 3 மணி, 26 நிமிடம் போராடி தோற்றார். மற்றொரு காலிறுதியில் அமெரிக்காவின் ப்ரான்சிஸ் டியபோ 6-3, 6-7 (5-7), 6-3, 4-1 என முன்னிலை வகித்த நிலையில், எதிர்த்து போட்டியிட்ட கிரிகோர் திமித்ரோவ் (பல்கேரியா) காயம் காரணமாக விலகினார். கலப்பு இரட்டையர் பிரிவு அரையிறுதியில் அமெரிக்காவின் டெய்லர் டவுன்செண்ட் – டொனால்டு யங் ஜோடியுடன் மோதிய இந்தியாவின் ரோகன் போபண்ணா – அல்டிலா சுட்ஜியாடி (இந்தோனேசியா) இணை 3-6, 4-6 என்ற நேர் செட்களில் தோற்று ஏமாற்றத்துடன் வெளியேறியது.
The post யுஎஸ் ஓபன் டென்னிஸ்; அரையிறுதியில் எம்மா: போபண்ணா ஏமாற்றம் appeared first on Dinakaran.