மேட்டுப்பாளையம்,அன்னூரில் 300 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

 

மேட்டுப்பாளையம்,செப்.2:இந்து முன்னணியின் கோவை கோட்ட செயலாளர் ராஜ்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்து முன்னணி சார்பாக நடத்தப்படும் விநாயகர் சதுர்த்தி மக்கள் எழுச்சி விழா வரும் செப்.7ம் தேதி முதல் 9ம் தேதி வரை மூன்று நாட்கள் கொண்டாடப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மேட்டுப்பாளையம் நகரில் 85,காரமடையில் 140,சிறுமுகையில் 35,அன்னூரில் 40 இடங்கள் என மொத்தமாக 300 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

முதல் நாளில் கோ பூஜை,குழந்தைகளுக்கான விளையாட்டுப்போட்டிகளும்,2 வது நாளில் விளக்கு பூஜை மற்றும் 250 இடங்களில் ஒரு லட்சம் பேருக்கு அன்னதானமும் வழங்கப்பட உள்ளது. தொடர்ந்து மூன்று தினங்களும் சிறப்பு பூஜைகளும்,அலங்காரமும் நடைபெற உள்ளது.தொடர்ந்து 9ம் தேதியன்று விசர்ஜன ஊர்வலம் மேட்டுப்பாளையம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு துவங்கி முக்கிய சாலை வழியாக ஊர்வலமாக சென்று பின்பு பவானி ஆற்றில் கரைக்கப்பட உள்ளது.இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

The post மேட்டுப்பாளையம்,அன்னூரில் 300 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை appeared first on Dinakaran.

Related Stories: