உக்ரைன் ஏவிய 158 டிரோன்களை சுட்டு வீழ்த்திய ரஷ்யா: மாஸ்கோ மீது தாக்குதல் நடத்த முயற்சி


மாஸ்கோ: உக்ரைன் ஏவிய 158 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. உக்ரைனின் மீது ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதலில் உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ் மற்றும் பல நகரங்களை குறி வைத்து உக்ரைன் தாக்குதல் நடத்தியது. இதில் கீவ் உள்பட பல நகரங்கள் வெடிகுண்டு தாக்குதலில் சின்னாபின்னமாகி சிதைந்து உள்ளன.

ரஷ்யாவின் வெடிகுண்டு தாக்குதல்களில் ராணுவ வீரர்கள், பொதுமக்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். ரஷ்யாவின் தாக்குதல்களுக்கு உக்ரைன் அடிக்கடி பதிலடி கொடுத்து வருகிறது. இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்தே ரஷ்யாவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், எண்ணெய் சேமிப்பு கிடங்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இது ரஷ்யாவின் தாக்குதல் வேகத்தை குறைத்தது.

கடந்த மாதம் ரஷ்யாவின் குர்ஸ்க் மாகாணத்தின் உள்ளே உக்ரைன் ராணுவம் அதிரடியாக புகுந்து தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக உக்ரைனில் உள்ள பல நகரங்களில் ரஷ்யா தாக்குதல் நடத்தியது. இந்த நிலையில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோ, குர்ஸ்க் மாகாணம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்றுமுன்தினம் உக்ரைன் ராணுவம் ஒரே நாளில் 158 டிரோன்களை ஏவியது. ஆனால், உக்ரைன் ஏவிய டிரோன்கள் இடைமறித்து சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.

The post உக்ரைன் ஏவிய 158 டிரோன்களை சுட்டு வீழ்த்திய ரஷ்யா: மாஸ்கோ மீது தாக்குதல் நடத்த முயற்சி appeared first on Dinakaran.

Related Stories: