விரைவான நீதிக்கு ஒத்திவைப்பு கலாசாரத்தை மாற்ற வேண்டும்: நீதித்துறைக்கு ஜனாதிபதி முர்மு வேண்டுகோள்

புதுடெல்லி: விரைவான நீதியை உறுதி செய்வதற்கு ஒத்தி வைப்பு கலாசாரத்தை நீதிமன்றங்கள் மாற்ற வேண்டும் என ஜனாதிபதி திரவுபதி முர்மு வேண்டுகோள் விடுத்துள்ளார். டெல்லியில் உள்ள பாரத மண்டபத்தில் மாவட்ட நீதித்துறையின் இரண்டு நாள் தேசிய மாநாடு நடந்தது. இதன் நிறைவு நாள் விழாவில் ஜனாதிபதி முர்மு நேற்று கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில்,‘‘நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் இருப்பது நமக்கு மிக பெரிய சவாலாகும்.

நீதிமன்றங்களில் ஒத்திவைக்கும் கலாசாரத்தை மாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். நாட்டில் உள்ள அனைத்து நீதிபதிகளுக்கும் நீதியை பாதுகாப்பதற்கான பொறுப்பு உள்ளது. கோர்ட் அறையின் அமைப்பு மூலம் சாதாரண மக்களின் மன அழுத்தம் அதிகரிக்கிறது.கறுப்பு அங்கி நோய் அறிகுறியால் பாதிக்கப்படுவது பற்றி ஆய்வு நடத்த வேண்டும்.நீதித்துறையில் பெண் அதிகாரிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது’’ என்றார். இந்த நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், ஒன்றிய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post விரைவான நீதிக்கு ஒத்திவைப்பு கலாசாரத்தை மாற்ற வேண்டும்: நீதித்துறைக்கு ஜனாதிபதி முர்மு வேண்டுகோள் appeared first on Dinakaran.

Related Stories: