பாஜவை தொடர்ந்து விமர்சித்தஜேடியு செய்தி தொடர்பாளர் கே.சி.தியாகி திடீர் ராஜினாமா

புதுடெல்லி: மக்களவை தேர்தலில் பாஜ கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், பீகாரின் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ஆந்திராவின் தெலுங்கு தேசம் கட்சிகளுடன் இணைந்து ஒன்றியத்தில் கூட்டணி ஆட்சி அமைத்தது. நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவரும் செய்தித் தொடர்பாளருமான கே.சி.தியாகி எப்போதும் பாஜவை விமர்சிப்பவர்.

கூட்டணிக்குப் பிறகும் கூட, வக்பு வாரிய சட்ட மசோதா, பொது சிவில் சட்டம், பாலஸ்தீனம் உள்ளிட்ட விவகாரங்களில் அவர் கட்சியின் நிலைப்பாட்டை வலியுறுத்தி பாஜவை கடுமையாக விமர்சித்து வந்தார். இது நிதிஷ் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், கட்சியின் செய்தித் தொடர்பாளர் பதவியிலிருந்து விலகுவதாக கே.சி.தியாகி முதல்வர் நிதிஷ்குமாருக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில், பிற பணிகள் இருப்பதால் செய்தித் தொடர்பாளர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக குறிப்பிட்டு ள்ளார்.

The post பாஜவை தொடர்ந்து விமர்சித்தஜேடியு செய்தி தொடர்பாளர் கே.சி.தியாகி திடீர் ராஜினாமா appeared first on Dinakaran.

Related Stories: