கொடைக்கானலில் இந்த கும்பல் எதற்காக முகாமிட்டுள்ளனர்? இவர்களிடம் வேறு கோபுர கலசங்கள் உள்ளதா என்பது பற்றி போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்து கண்டுபிடிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘‘பழங்கால கோபுர கலசங்களுக்கு மர்ம கும்பல் வைத்துள்ள பெயர் ரைஸ் புல்லிங் என்பதாகும். இவை வீடுகளில் இருந்தால் செல்வம் கொழிக்கும் என்ற நம்பிக்கையில் பல லட்சங்கள் கொடுத்து சிலர் வாங்குவது உண்டு. இது சட்டப்படி குற்றமாகும். இதனை பயன்படுத்தி பலர் போலி கோபுர கலசங்களை ஏமாற்றி விற்று வருகின்றனர். போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.
The post கோபுர கலசம் விற்கும் ரைஸ்புல்லிங் கும்பல் கொடைக்கானலில் முகாம்?வீடியோ வைரலால் பரபரப்பு appeared first on Dinakaran.