சிறுகமணி கரும்பு ஆராய்ச்சி நிலையத்தில் பெரம்பலூர் கரும்பு விவசாயிகள் பட்டறிவு பயணம்

 

திருச்சி, ஆக.31: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சிறுகமணி கரும்பு ஆராய்ச்சி நிலையத்தின் மூலம் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் மற்றும் வேப்பந்தட்டை வட்டாரங்களைச் சேர்ந்த 40 விவசாயிகள் இந்த தேசிய வேளாண் தொழில் நுட்ப முகமை திட்டத்தின் கீழ் சிறுகமணி கரும்பு ஆராய்ச்சி நிலையத்தை நேற்று பார்வையிட்டனர்.

நீடித்த நிலையான கரும்பு சாகுபடி, அதிக மகசூல் தரும் கரும்பு ரகங்கள் அரும்பு தேர்ந்தெடுத்தல், நாற்றங்கால் தயாரிப்பு, நடவு வயல் தயாரிப்பு, உரமிடுதல், ஊடுபயிரிடுதல், களையெடுத்தல், நிலப்போர்வை (மூடாக்கிடல்), நீர் மேலாண்மை, மண் அணைத்தல் மற்றும் கரும்பில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு விஞ்ஞானிகள் விளக்கிக்கூறினர்.

கரும்பு பருசீவல் இயந்திரம் குறித்த செயல்விளக்கமும் அளிக்கப்பட்டது. இப்பயிற்சியில் கரும்பு ஆராய்ச்சி நிலைய இணைப்பேராசிரியர் மற்றும் தலைவர் ராஜாபாபு, பேராசிரியர் மாசிலாமணி மற்றும் வேளாண் அறிவியல் நிலைய உதவி பேராசிரியர் ஷீபா ஜாஸ்மின் ஆகியோர் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர் என சிறுகமணி கரும்பு ஆராய்ச்சி நிலைய தலைவர் ராஜாபாபு தெரிவித்துள்ளார்.

The post சிறுகமணி கரும்பு ஆராய்ச்சி நிலையத்தில் பெரம்பலூர் கரும்பு விவசாயிகள் பட்டறிவு பயணம் appeared first on Dinakaran.

Related Stories: