உடுமலை, ஆக. 31: உடுமலை மத்திய ஒன்றிய திமுக செயற்குழு கூட்டம், ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் தலைமையில் போடிப்பட்டியில் நேற்று நடந்தது. கூட்டத்தில், நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி வெற்றி பெற பாடுபட்ட அனைத்து கழக தொண்டர்கள், நிர்வாகிகள், கூட்டணி கட்சியினருக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிப்பது, உரிய ஆலோசனை வழங்கிய அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கு நன்றி தெரிவிப்பது, அருந்ததியருக்கு உள்ஒதுக்கீட்டை உச்சநீதிமன்றத்தின் வாயிலாக உறுதிப்படுத்திய முதல்வர் மு.கஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் அனிதா, ஈஸ்வரமூர்த்தி, ஞானசேகரன், சந்திரசேகரன், ரவிக்குமார், தங்கவேலு, சாஜிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மொடக்குபட்டி ரவி நன்றி கூறினார்.கூட்டத்தில், திமுக வேட்பாளர் வெற்றிக்காக பணியாற்றிய நிர்வாகிகளுக்கு சாலை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
The post உடுமலை மத்திய ஒன்றிய திமுக செயற்குழு கூட்டம் appeared first on Dinakaran.