பாகிஸ்தானில் பெய்து வரும் கனமழையால் திடீர் நிலச்சரிவு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தான்: பாகிஸ்தானில் பெய்து வரும் கனமழையால் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் அப்பர் டிர் மாவட்டத்தில் இன்று காலை திடீர் நிலச்சரிவு ஏற்பட்டு ஒரு வீட்டின் மேல் சரிந்தது. இந்த சம்பவத்தில் 3 பெண்கள், 6 குழந்தைகள், 3 ஆண்கள் என மொத்தம் 12 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் உயிரிழந்த 12 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றும் அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் நிலச்சரிவின் இடிபாடுகளில் இருந்து அப்பகுதியை அகற்றுவதற்கான மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

பாகிஸ்தானின் சில பகுதிகள் தற்போது பெய்து வரும் கனமழையால் திடீர் வெள்ளம் மற்றும் பல மாவட்டங்களில் நிலச்சரிவு போன்றவற்றை எதிர்கொண்டுள்ளது. மேலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு நாடு முழுவதும் பலத்த காற்றுடன் கூடிய பரவலான மழை பெய்யும் என்று பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

 

The post பாகிஸ்தானில் பெய்து வரும் கனமழையால் திடீர் நிலச்சரிவு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 பேர் உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Related Stories: