தமிழ்மொழியை ஒன்றிய ஆட்சி மொழியாக அறிவிக்க டெல்லியில் தமிழ் அறிஞர்கள் ஒருநாள் உண்ணாவிரதம்..!!

டெல்லி: தமிழ்மொழியை ஒன்றிய ஆட்சி மொழியாக அறிவிக்க வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழ் அறிஞர்கள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை தமிழ்நாடு அரசு டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் தொடங்கி வைத்தார். உலகத் தமிழ் கவிஞர்கள் கலை இலக்கிய சங்கம் சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் நடைபெறுகிறது. தமிழ் மொழியை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக அறிவிக்கவும் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கவும் வலியுறுத்தியுள்ளனர். டெல்லி தமிழ் சங்க பொதுச் செயலாளர் முகுந்தன் உள்பட 133 தமிழர் அறிஞர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

The post தமிழ்மொழியை ஒன்றிய ஆட்சி மொழியாக அறிவிக்க டெல்லியில் தமிழ் அறிஞர்கள் ஒருநாள் உண்ணாவிரதம்..!! appeared first on Dinakaran.

Related Stories: