திருமலையில் தற்போது பைக் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 11 ஆயிரம் வாகனங்களை நிறுத்த போதுமான இடம் உள்ளது. இருப்பினும் கருட சேவைக்கு கூடுதல் வாகனங்கள் நிறுத்த திட்டங்களை தயாரிக்க வேண்டும். பாதுகாப்பு, கூடுதல் பணியாளர்கள், சிசிடிவி மற்றும் கூடுதல் லக்கேஜ் சென்டர்களையும் ஏற்பாடு செய்ய வேண்டும். போதுமான லட்டுகள் நிலுவை வைப்பது, சிறந்த கலைக்குழுக்கள் தேர்வு, கூடுதல் கழிப்பறைகள் போன்றவற்றின் செயல்பாடு குறித்து கேட்டறிந்தார்.
12 மணி நேரம் காத்திருப்பு: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 60,694 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 27,350 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ₹3.78 கோடி காணிக்கையாக செலுத்தியுள்ளனர். இந்நிலையில் இன்று காலை முதல் ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸில் உள்ள 13 அறைகளில் பக்தர்கள் தங்க வைக்கப்பட்டனர். இவர்கள் சுமார் 12 மணி நேரம் காத்திருந்து சுவாமியை தரிசிக்க வேண்டியுள்ளது. ₹300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 3 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.
The post திருப்பதி பிரம்மோற்சவத்தின்போது கூடுதல் வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு appeared first on Dinakaran.